ஹூண்டாய் கிரெட்டா, அல்காசர்
2023-02-06@ 17:18:36

ஹூண்டாய் நிறுவனம், 2023 கிரெட்டா மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது, ரியல் டிரைவிங் எமிஷன் (ஆர்டிஇ) விதிகளை பூர்த்தி செய்துள்ளது. பல்வேறு சாலைகளில் வாகனங்களை ஓட்டி மேற்கொள்ளப்படும் சோதனை இது. பாரத் ஸ்டேஜ் 6 இன்ஜின் தரநிலைகளின் 2வது கட்டமாக மேற்கண்ட விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 1ம் தேதி முதல் இது கட்டாய நடைமுறையாகும். இந்த காரின் துவக்க ஷோரூம் விலையாக சுமார்ரூ.10.84 லட்சம் (1.5 எம்டி-இ) எனவும், டாப் வேரியண்டான 1.5 ஏடி நைட் எஸ்எக்ஸ் (ஓ) சுமார் ரூ.19.13 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட இந்த புதிய மாடல் விலை ரூ.20,000 முதல் ரூ.45,000 வரை கூடுலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிலையான பாதுகாப்பு அம்சமாக 6 ஏர்பேக்குகள், இருக்கும். இந்த கார், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் கிடைக்கிறது. இதுபோல், அல்காசர் என்ற மாடலையும் ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. இதுவும் ஆர்டிஇ விதிகளை பூர்த்தி செய்துள்ளது. இது, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் என 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேற்கண்ட 2 கார்களிலுமே 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தலாம். ஷோரூம் விலையாக ரூ.16.1 லட்சம் முதல் ரூ.20.85 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஓலா ஹோலி எடிஷன்
ஏப்.1 முதல் கார் விலையை 5% வரை உயர்த்தும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!!
தேர்தல் ஆணையர்கள் நியமனம் உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு சட்ட அமைச்சகம் எதிர்ப்பு
எம்ஜி காமெட் எலக்ட்ரிக் கார்
சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக்
ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார்
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!