வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த பிரபல ரவுடி சிறையில் அடைப்பு
2023-02-06@ 01:00:41

சென்னை: வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர் அடுத்த ஒரகடம் வெங்கடேஸ்வரா நகர், முனுசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (32). வண்டலூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்தவர் கார்த்திக் (29) இருவரும் பிரபல ரவுடிகள். இந்நிலையில் கடந்த 2ம் தேதி விஜயகுமாரின் வீட்டிற்கு வந்த ஓட்டேரி கார்த்திக், வீட்டு மாடியில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஒரு நாட்டு வெடிகுண்டு திடீரென பலத்த சத்ததுடன் வெடித்ததில் கார்த்திக்கின் இரண்டு கைகளும் துண்டித்து படுகாயமடைந்தார்.
தகவலறிந்த அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான போலீசார் விஜயகுமாரின் வீட்டிற்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த கார்த்திக்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்ததோடு, ரவுடி விஜயகுமாரையும் கைது செய்தனர். விசாரணையில், மற்றொரு ரவுடியான தாம்பரம் சூர்யா என்பவரும், ஓட்டேரி கார்த்திக்கும் நண்பர்களாக இருந்துள்ளதாகவும், நாளடைவில் ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே, சூர்யாவை கொலை செய்ய திட்டமிட்டு கார்த்திக் வெடிகுண்டு தயாரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ரவுடியின் கைகள் துண்டான சம்பவம் அக்கம் பக்கத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம்
தமிழகத்தில் இந்த ஆண்டு ஈரோட்டில் 102 டிகிரி வெயில்: அதிகபட்சமாக பதிவானது
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: பொது, வேளாண்மை பட்ஜெட் 3ம் நாள் விவாதம் நடக்கிறது
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய மக்கள் ஆதரவு தர வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
போராட்டம் நடத்தினால் சம்பளம் ‘கட்’: ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி