ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசுவை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை
2023-02-05@ 16:46:09

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசுவை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஜே.சி.டி. பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தென்னரசுவை அதிமுக வேட்பாளராக நிறுத்த ஒப்புதல் கேட்டு அவைத் தலைவர் கடிதம் அனுப்பியுள்ளதாக ஜெயக்குமார் தகவல் அளித்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இருதுருவங்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரு தரப்பினரும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தனர். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதேவேளை ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவதாக அறிவித்தார். இந்நிலையில் இரட்டை இலை யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது .
உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் இது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர் வழங்கும் கடிதங்களை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்துள்ளதாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கடிதம் அனுப்பியுள்ளார். இதில் அவரை ஆதரிக்காதவர்கள் மாற்று வேட்பாளர் பெயரையும் பட்டியலில் குறிப்பிட அறிவுறுத்தி உள்ளார்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசுவை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது பற்றி ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆலோசனையில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் செய்திகள்
கூட்டணி குறித்து கேட்காதீங்க... அது மேலிடம் பார்த்துக்கும்... அண்ணாமலை கப்சிப்
இபிஎஸ், ஓபிஎஸ்சை இணைத்து அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன்: சசிகலா பேட்டி
ராகுல் பதவி பறிப்பு அராஜக நடவடிக்கை: தமிமுன் அன்சாரி கண்டனம்
நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம்
சட்டம் தனக்கு பொருந்தாது என நினைப்பவர்தான் ராகுல்
30 நாள் காத்திருக்குமா தேர்தல் ஆணையம்?
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி