துர்கா ஸ்டாலின் சகோதரி மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: இன்று மாலையில் உடல் தகனம்
2023-02-05@ 15:42:10

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியின் சகோதரி சாருமதி சென்னையில் நேற்று நள்ளிரவு காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார். சாருமதி உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் மூத்த சகோதரி சாருமதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 62.
துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி என 2 சகோதரிகளும், ராஜமூர்த்தி என ஒரு சகோதரரும் உள்ளனர். இதில் சாருமதி சென்னையில் வசித்து வந்தார். உடன் பிறந்தவர்கள் மீது துர்கா ஸ்டாலின் எப்போதும் பாசமாக இருப்பார். இந்தநிலையில், சாருமதி மறைவு அவருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாருமதியின் கணவர் சண்முக சுந்தரம், மகன் கார்த்திகேயன், மருமகள் ரேவதி, மகள் அபிராமி, மருமகன் விக்னேஷ் மற்றும் காவியா, கவிநிலா, ஆதிரா ஆகிய பேரக்குழந்தைகள் உள்ளனர். மறைந்த சாருமதியின் உடல் சென்னை எழும்பூரில் காசாமேஜர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், பெரிய கருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், கனிமொழி, தயாநிதி மாறன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட எம்பிக்கள், கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை சாருமதியின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
மேலும் செய்திகள்
சென்னையில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய, சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை
காதல் திருமணத்திற்கு எதிரான ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்..!
அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: 4 கிலோ கஞ்சா பறிமுதல்..!
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா நாளை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டலின்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை அறிவிப்புகளை பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்த்திட நடவடிக்கை..!
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி