தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
2023-02-05@ 14:48:34

சென்னை: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் இன்றூ ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06.09.2023 முதல் 09.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து மற்றும் நாலுமுக்கு பகுதியில் தலா 3 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு: நாளை மறுநாள் தீர்ப்பு..!
சென்னையில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய, சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை
காதல் திருமணத்திற்கு எதிரான ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்..!
அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: 4 கிலோ கஞ்சா பறிமுதல்..!
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா நாளை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டலின்
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி