சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
2023-02-05@ 13:44:45

சென்னை: சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தங்களது பணத்தை பறிகொடுத்து தற்கொலைக்கு தூண்டப்படும் நிலை உள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் கடன் செயலிகள் மூலமும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பிட்ட தொகையை கடனாக வழங்கிய அதற்கு வட்டி என்ற பெயரில், பல்வேறு நிபந்தனைகளை திணித்து பெரிய தொகையை கட்டுமாறு வலியுறுத்துகின்றனர்.
அவ்வாறு தவனையை கட்ட மறுக்கும் வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் வசூலித்து வருகின்றனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடுமுழுவதும் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உடனடி மற்றும் அவசர நடவடிக்கையாக சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
சென்னையில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய, சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை
காதல் திருமணத்திற்கு எதிரான ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்..!
அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: 4 கிலோ கஞ்சா பறிமுதல்..!
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா நாளை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டலின்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை அறிவிப்புகளை பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்த்திட நடவடிக்கை..!
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி