பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
2023-02-05@ 10:15:08

சென்னை: இயக்குநர் டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரி தோழருமான டி.பி.கஜேந்திரன் மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டி.பி.கஜேந்திரன் மறைவு குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில்; 'பிரபல இயக்குநரும். நடிகரும். எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர், திரு. டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும். அதிர்ச்சியையும் அளிக்கிறது.
எங்க ஊரு காவல்காரன். பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன். பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி.
கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர், கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன்.
தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது.
டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர். திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை: சீமான் கடும் கண்டனம்..!
சென்னையில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணையவழி பயிற்சி
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
பின்தங்கிய பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்றுகொள்ளப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்
கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக் கசிவு அடைந்ததை அடுத்து இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதி!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!