ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
2023-02-05@ 01:02:16

சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நகர் ஊரமைப்பு துறையில் காலியாக உள்ள 1,083 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 4ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு மே 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய 1,083 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை பணியில் பணி மேற்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் பதவியில் 794 பணியிடங்கள், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் 236 இடங்கள், பொதுப்பணித்துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் 18 இடங்கள், நகர் ஊரமைப்பு துறை வரைவாளர்(கிரேடு 3) 10 இடங்கள், தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்துறை முதலாள்(கிரேடு 2) 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கான எழுத்து தேர்வுக்கு மார்ச் 4ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின் இணையதளம்(www.tnpsc.gov.in, www.tnpscexams.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இணைய வழி விண்ணப்பங்களை மார்ச் 9ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மார்ச் 11ம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம். இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு மே 27ம் தேதி நடைபெறுகிறது. எழுத்து தேர்வு சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்