ராகுல்காந்தி உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை
2023-02-05@ 00:49:21

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நெருங்கிய உதவியாளரான அலங்கார் சவாயிடம் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகெட் கோகலே கடந்த 25ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பொதுமக்களிடம் இருந்து திரட்டிய பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது வங்கி கணக்கில் ரூ.23.54லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது குறித்து அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியது.
இதற்கு முன்னாள் வங்கி அதிகாரியும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான அலங்கார் சவாய், சமூக ஊடக பணி மற்றும் ஆலோசனைக்காக இந்த பணத்ைத கொடுத்ததாக அவர் தெரிவித்தார். ஏன் பணமாக கொடுத்தார் என்ற கேள்விக்கு, அவர் மட்டும் தான் இதற்கு பதிலளிக்க முடியும் என்று கோகலே தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அலங்கார் சவாய்க்கு அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வார தொடக்கத்தில் 3 நாட்கள் சவாயிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு வரும் சவாய் ராகுல்காந்தியின் நெருங்கிய உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல்: ரூ.1.14 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி
தனது வீட்டை தாக்கிய பழங்குடி வகுப்பினர் மீது நடவடிக்கை வேண்டாம்: எடியூரப்பா பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்
ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு
டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்