உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு: கொலிஜீயம் பரிந்துரைக்கு அரசு ஒப்புதல்
2023-02-05@ 00:47:45

புதுடெல்லி: உச்சநீதி மன்றத்துக்கு கொலிஜீயம் பரிந்துரைத்த 5 நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. அவர்கள் நாளை பதவி ஏற்க உள்ளனர். உச்சநீதி மன்ற, உயர்நீதி மன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜீயம் நடைமுறை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும், உச்சநீதி மன்றத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதுகுறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, “இது முக்கியமான விவகாரம். இதில் சங்கடமான நிலையை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கி விடாதீர்கள்” என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி, கொலிஜீயம் பரிந்துரைத்த நீதிபதிகளின் பெயர்களுக்கு ஒன்றிய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று கூறினார். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி உச்சநீதி மன்றத்துக்கு கொலிஜீயம் பரிந்துரைத்த நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது. ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது டிவிட்டரில், “ராஜஸ்தான் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல்,
மணிப்பூர் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதி மன்ற நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா, அலாகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உச்சநீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார். இவர்கள் 5 பேருக்கும் நாளை காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி சந்தி சூட் பதவிபிரமாணம் செய்து வைக்கிறார். இதனால் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32ஆக அதிகரிக்கும். மொத்த நீதிபதிகள்எண்ணிக்கை 34 ஆகும்.
மேலும் செய்திகள்
தனது வீட்டை தாக்கிய பழங்குடி வகுப்பினர் மீது நடவடிக்கை வேண்டாம்: எடியூரப்பா பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்
ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு
டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கம் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு.!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்