ஜவுளி துறைக்கு வரப்பிரசாதம் 90% தண்ணீரை குறைக்கும் நானோ தொழில்நுட்பம்: ஐஐடி ரோபர் கண்டுபிடிப்பு
2023-02-05@ 00:46:49

சண்டிகர்: ஜவுளித்துறையில் தண்ணீர் பயன்பாட்டை 90 சதவீதம் வரை குறைக்கக் கூடிய புதுமையான நானோ தொழில்நுட்பத்தை ஐஐடி ரோபர் கண்டுபிடித்துள்ளது. ஜவுளித் தொழிலில் துணியை தயாரிக்க பல்வேறு கட்டங்களில் தண்ணீர் அதிகளவில் தேவைப்படுகிறது. சாயமிடுதல் போன்ற பணிகளில் நீர் மாசடைதலும் அதிகளவில் உள்ளது. இந்த தண்ணீரை சுத்திகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதோடு, தண்ணீரை சுத்திகரிக்காமல் நீர் நிலைகளில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயமும் உள்ளது. இந்தநிலையில், ஜவுளித்துறையில் தண்ணீரின் தேவையில் 90 சதவீதம் அளவுக்கு குறைக்கும் நானோ தொழில்நுட்பத்தை ஐஐடி ரோபர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பை உருவாக்கிய நீல்கந்த் நிர்மல்கர் கூறுகையில், ‘‘ஒரு கிலோ பருத்தி துணியை பதப்படுத்த 200 முதல் 250 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் எங்களின் காற்று நானோ குமிழி தொழில்நுட்பத்தில் 90 முதல் 95 சதவீத அளவுக்கு தண்ணீர் மற்றும் ரசாயன பயன்பாட்டையும், 90 சதவீத மின்சார சிக்கனத்தையும் செய்ய முடியும். இதில் பயன்படுத்தப்படும் நீர்க்குமிழிகள் மனித தலைமுடியை விட 10 ஆயிரத்தில் ஒரு பங்கு என மிகமிகச் சிறியதாகும்.
இவை தண்ணீரை விட துணிகளில் சிறப்பாக செயல்பட்டு, ரசாயனங்களை திறம்பட கையாள்கிறது’’ என்றார். நானோ குமிழி இயந்திரம் மூலம் பதப்படுத்திய பிறகு அந்த தண்ணீரை மீண்டும் பயன்படுத்தலாம் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம். அணு அல்லது மூலக்கூறுகளின் பண்புகளை நானோ அளவில் மாற்றி புதிய பண்புள்ள பொருள்களை உருவாக்குவது தான் நானோ டெக்னாலஜி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல்: ரூ.1.14 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி
தனது வீட்டை தாக்கிய பழங்குடி வகுப்பினர் மீது நடவடிக்கை வேண்டாம்: எடியூரப்பா பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்
ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு
டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்