மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
2023-02-05@ 00:22:12

ஷதோல்: மத்தியபிரதேச மாநிலம் ஷதோல் மாவட்டத்தில், உடலில் 50 சூடு வைக்கப்பட்டதால் இரண்டரை மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஷதோல் மாவட்டம் சிங்பூர் பகுதியில் உள்ள கத்தோடியாவில் வசிக்கும் பெண், உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் இரண்டரை மாதம் பெண் குழந்தையை உள்ளூர் வைத்தியரிடம் அழைத்து சென்றுள்ளார். அந்த வைத்தியர் குழந்தையை குணப்படுத்த குழந்தையின் உடலில் 50 சூடு வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட குழந்தை ஷதோல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதை தொடர்ந்து குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து ஊடகங்களில் வௌியான செய்திகளின் அடிப்படையில், அந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து பெண் பலாத்காரம் நிறுவன அதிகாரிக்கு 10 ஆண்டு சிறை
பிளஸ்2 மாணவியை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர்: விசாரணையின் போது எஸ்கேப்
ஆருத்ரா நிதி நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி முக்கிய குற்றவாளியான பாஜ நிர்வாகி ஹரிஷ் கைது: ரகசிய இடத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை
சிறுவனுக்கு செக்ஸ் டார்ச்சர் வாலிபர் போக்சோவில் கைது: உடலில் கடித்து காயப்படுத்திய கொடூரம்
ரவுடியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி