பாகிஸ்தானில் பயங்கரம்: பஸ் மீது லாரி மோதல் 18 பேர் பரிதாப பலி
2023-02-04@ 19:17:44

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் லக்கி மார்வாட் மாவட்டத்தில் இருந்து தலைநகர் பெஷாவர் நோக்கி பயணிகளை ஏற்றி கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. 30க்கும் மேற்பட்டோர், பஸ்சில் பயணம் செய்தனர். இந்த பஸ் கோஹாட் மாவட்டத்தில் சிந்து நெடுஞ்சாலையில் உள்ள கோஹாட் சுரங்கப்பாதைக்கு அருகில் சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி, பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பஸ் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஜூக்கர்பெர்க் - பிரிசில்லா தம்பதிக்கு 3வது பெண் குழந்தை
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு
அமெரிக்காவின் இந்தியாவுக்கான தூதராக கார்செட்டி பதவியேற்பு: கமலா ஹாரிஸ் பங்கேற்பு
லண்டன் நாடாளுமன்ற சதுக்கம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்
புளோரிடா பல்கலை. அறங்காவலர் குழுவில் இந்தியர்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி