சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
2023-02-04@ 18:01:14

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 01.01.2023 முதல் 03.02.2023 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 10 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 13 குற்றவாளிகள், சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 1 குற்றவாளி, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 8 குற்றவாளிகள் என மொத்தம் 32 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில் கடந்த 28.01.2023 முதல் 03.02.2023 வரையிலான ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளி 1.செந்தில் (எ) சுரேஷ் (எ) சிவா, வ/39, த/பெ.டில்லி, எண்.2/412, அம்பேத்கர் நகர், ராஜாஜி தெரு, லெட்சுமி நகர், முடிச்சூர், சென்னை என்பவர் மீது மத்தியகுற்றப்பிரிவு விபச்சார தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேற்படி குற்றவாளி செந்தில் (எ) சுரேஷ் (எ) சிவாவின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 30.01.2023 அன்று உத்தரவிட்டார்.
அதன்பேரில் குற்றவாளி செந்தில் (எ) சுரேஷ் (எ) சிவா குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதே போல 2.ஜோசப், வ/22, த/பெ.எட்வின், எண்.77, அன்னை சத்யா நகர், அண்ணாநகர் கிழக்கு, சென்னை என்பவர் மீது குற்ற வழக்குகள் உள்ள நிலையில் மீண்டும் கத்தியைக்காட்டி மிரட்டி வழிப்பறி செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்படி குற்றவாளி ஜோசப்பின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த K-4 அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க 02.02.2023 உத்தரவிட்டார்.
அதன்பேரில் குற்றவாளி ஜோசப் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 3.சந்தன அருண் (எ) அருண்குமார், வ/42, த/பெ.மாணிக்கவாசகம், எண்.3B/406, ஜெயச்சந்திரன் நகர், பள்ளிக்கரணை, சென்னை என்பவர் ஆன்லைன் மூலம் 1.5 கோடி மோசடி செய்த குற்றத்திற்காக மத்தியகுற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவிலும், 4.ரம்யா, வ/35, க/பெ.மாதவன், எண்.91, அன்னை தெரசா தெரு, வளசரவாக்கம், சென்னை அவரது தாய் 5.சசிகலா, வ/63, க/பெ.கோதண்டராமன், எண்.91, அன்னை தெரசா தெரு, வளசரவாக்கம், சென்னை ஆகிய இருவரும் சேர்ந்து மெடிக்கல் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்த குற்றத்திற்காக மத்தியகுற்றப்பிரிவு EDF-3 பிரிவிலும் 6.சங்கர் (எ) கௌரி சங்கர், வ/27, த/பெ.ரவி, எண்.28/13, மீனம்பாள் நகர் 4வது தெரு, கொருக்குப்பேட்டை, சென்னை என்பவர் மீது 1 கொலை வழக்கு உட்பட 5 வழக்குகள் உள்ள நிலையில் வழிப்பறி செய்த குற்றத்திற்காக H-6 ஆர்.கே.நகர் காவல் நிலையத்திலும், 7.சூர்யா, வ/24, த/பெ.தினகரன், எண்.25, E.V.R.சாலை, பெரியமேடு, சென்னை என்பவர் மீது G-2 பெரியமேடு காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார்.
இவர் மீது 8 வழக்குகள் உள்ள நிலையில் வழிப்பறி செய்த குற்றத்திற்காக G-2 பெரியமேடு காவல் நிலையத்திவ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேற்படி குற்றவாளிகளின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த குற்றவாளிகள் சந்தன அருண் (எ) அருண்குமார், ரம்யா, சசிகலா, சங்கர் (எ) கௌரிசங்கர், சூர்யா ஆகிய 5 நபர்களை சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க 03.02.2023 உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றவாளி 5 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், குற்ற வழக்குகள் உள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், இனி 1 வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கொளத்தூர், கோயம்பேடு காவல் மாவட்டங்களில் தலா 2 குற்றவாளிகள், பூக்கடை, கீழ்ப்பாக்கம், அடையார் மற்றும் திருவல்லிக்கேணி காவல் மாவட்டங்களில் தலா 1 குற்றவாளி என மொத்தம் 8 குற்றவாளிகள் கடந்த 28.01.2023 முதல் 03.02.2023 வரையிலான ஒரு வாரத்தில் செயல்துறை நடுவராகிய சம்மந்தப்பட்ட துணை ஆணையாளர்கள் உத்தரவின்பேரில், பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகள்
வேளாண் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது; மக்கள் பதற்றப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்க்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நிதி ஆயோக் தலைவர், குழுவினர் சந்திப்பு..!!
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!