பொதுமக்கள் சானிட்டரி நாப்கின், டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
2023-02-04@ 17:54:41

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்; பெருநகர சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி, பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பையினை மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய வீட்டு உபயோகக் குப்பை என வகைப்பிரித்து, பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கி சேகரம் செய்யப்படுகிறது.
இதைப்போல, சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளையும் தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிடவும், இவ்வாறு சேகரிக்கப்படும் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் மண்டலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்படும் மண்டலங்களில் அதற்கென ஒதுக்கப்பட்ட வாகனங்கள் மூலமாக கொடுங்கையூர் மற்றும் மணலியில் அமைந்துள்ள எரியூட்டு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கழிவுகளை கையாள்வது குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடம் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள்.
எனவே, பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை உபயோகப்படுத்தும் ஒவ்வொரு வீட்டிலும் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து பாதுகாப்பாக தனியே மக்கும் உறையில் போட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுவரை மண்டல வாரியாக பரிசோதனை அடிப்படையில் 18,140 கி.கி சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் மணலியில் அமைந்துள்ள எரியூட்டு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் செய்யப்பட்டது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னையில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய, சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை
காதல் திருமணத்திற்கு எதிரான ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்..!
அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: 4 கிலோ கஞ்சா பறிமுதல்..!
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா நாளை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டலின்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை அறிவிப்புகளை பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்த்திட நடவடிக்கை..!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!