சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கர்நாடக பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு
2023-02-04@ 16:24:36

சென்னை: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்ற வேண்டும்.
ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆட்சியை பிடித்தது. முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில சட்டபேரவை தேர்தலை கவனிப்பதற்கு ஒன்றிய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பாஜவின் பொறுப்பாளராக அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் பாஜகவின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் 9 ஆண்டுகள் பணிபுரிந்தவர். கர்நாடக மக்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என்பதால் அவருக்கு அந்த ெபாறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்
நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்
ராகுலின் குரலை ஒடுக்க பாஜக சதி; நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம்: அபிஷேக் மனு சிங்வி பேட்டி
ராகுல் காந்தி சிறை, அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
எத்தனை சதி செய்தாலும் ராகுல் காந்தி போராட்டத்தை தொடர்வார்; தொடர்ந்து சண்டை செய்வோம்: காங்கிரஸ் ட்வீட்
சிறை தண்டனை அனுபவித்து வரும் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்: கணவர் குறித்து உருக்கமான பதிவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி