வங்கியில் இன்வெர்ட்டர்கள் வெடித்தது: கொடுங்கையூரில் பரபரப்பு
2023-02-04@ 15:06:38

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் எம்ஆர். நகர் எத்திராஜ் சுவாமி சாலையில் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வங்கி திறக்கப்பட்டு ஊழியர்கள் பணியை கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது மின்வெட்டு ஏற்பட்டதால் இன்வெர்ட்டர்கள் தானாக செயல்பட தொடங்கிய சில நிமிடங்களில் அந்த அறையில் இருந்து பயங்கர சத்தம் ஏற்பட்டு புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், வங்கியில் இருந்து வெளியே ஓடிவந்துவிட்டனர். இதன்பிறகு வங்கி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செம்பியம், வியாசர்பாடி, கொருக்குபேட்டை மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து, மத்திய சென்னை தீயணைப்பு அலுவலர் சரவணன் தலைமையில் தீயை அணைத்தனர். இன்வெர்ட்டர் அறையின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சென்று ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்து புகையை கட்டுப்படுத்தினர். இதன்பிறகு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க மூச்சு கருவியை பயன்படுத்தியும் புகை போக்கிகளை பயன்படுத்தியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்தில் 40 இன்வெர்ட்டர்கள் தீயில் கருகி நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்துக்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: காவல்துறை ஐகோர்ட்டில் தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி
சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகனநிறுத்தம் தற்காலிகமாக மூடல்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!