வட்டிக்கு பணம் வாங்கிய பிரச்னையில் மூதாட்டியை கொடூரமாக கொன்ற ஆயுதப்படை போலீஸ்காரர் கைது: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்
2023-02-04@ 14:44:33

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த மேலேரி கிராமம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் யசோதா அம்மாள்(75). இவரது கணவர் பலராமன் இறந்துவிட்டார். இவரது 3 மகள்கள், ஒரு மகனுக்கு திருமணமாகி சென்னை மற்றும் சித்தூர் பகுதிகளில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். யசோதா அம்மாளுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் தனியாக வசித்துவந்தார். கடந்த 29ம் தேதி மதியம் தனது வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் யசோதா அம்மாள் தலையில் அம்மிக்கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டில் இருந்து 25 சவரன் நகைகள் கொள்ளைப்போயிருந்தது.
இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அத்துடன் கைரேகைகள் மற்றும் தடயங்களை வைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இதில், ‘’தனக்கு கிடைத்த நில வருவாய் மற்றும் தனது மகன், மகள்கள் வழங்கும் தொகையை வைத்து யசோதா அம்மாள் அந்த பகுதியை சேர்ந்த பலருக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளார்’ என்று தெரியவந்தது. சம்பவத்தன்று யசோதா அம்மாளிடம் கடன் வாங்கியிருந்த அவரது உறவினரின் மகன் வாய்த்தகராறில் ஈடுபட்டதாகவும் யசோதா உள்பட பலரை ஏமாற்றி அவர் கார், பங்களா உள்ளிட்ட பல்வேறு வசதிவாய்ப்புகளுடன் வாழ்ந்து வருவதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (எ) சக்திவேல் (25) என்பவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘’அவர் சென்னை ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார் என்பதும் யசோதா அம்மாளிடம் வட்டிக்கு ₹2 லட்சம் கடன் வாங்கியதும் அவற்றை வட்டியுடன் அசலை திருப்பி தருவதில் காலம் தாழ்த்தி வந்ததாகவும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘’கடந்த 28ம் தேதி இரவு சதீஷ் வாங்கிய கடனை உடனடியாக திருப்பி தரவேண்டும். இல்லையேல், அவரது பெற்றோரிடம் கூறிவிடுவேன் என யசோதா அம்மாள் மிரட்டியதால் சதீஷ் கோபம் அடைந்தார்.
அவரை வீட்டின் பின்பக்கம் அழைத்து சென்று, யசோதா அம்மாளின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, மறுநாள் காலை அவரது வீட்டில் இருந்த 25 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்’ என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சுங்குவார்சத்திரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, ஆயுதப்படை காவலர் சதீஷை கைது செ செய்து அவரிடம் இருந்து 16 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மீதமுள்ள நகைகள் மற்றும் யசோதா அம்மாள் தவிர வேறு யார், யாரிடம் கடன் வாங்கியுள்ளார் என்று விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது
இன்ஃபுளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து நாளை மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
10,000 சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி