பொள்ளாச்சி வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ‘ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்’: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வழங்கல்
2023-02-04@ 13:59:07

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வழியாக பழனி பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் வினியோகம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் நடக்கும் தைப்பூச திருவிழாவையட்டி கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல பல்வேறு மாவட்டங்களில் பக்தர்கள் பாத யாத்திரையாக நடைபயணம் மேற்கொள்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு சென்று சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.
இதில், கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பாத யாத்திரையாக அதிகளவில் செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் சாலை போக்குவரத்து மற்றும் வெயிலில் தாக்கத்தை கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில் நடைபயணம் மேற்கொள்கின்றனர். கோவை ரோடு, உடுமலை ரோடுகளில் வாகனங்கள் அதிவேகத்துடன் செல்வதால், பக்தர்களுக்கு விபரீத விளைவுகள் ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே போலீசார் வேகமாக வரும் வாகனங்களை கண்காணித்து விபத்தை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இரவு நேரங்களில் பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு கருதி ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் மற்றும் வடடார போக்குவரத்து அதிகரிகள் வழங்குகின்றனர்.
நாளை (5ம் தேதி) தைப்பூசதிருவிழா என்றாலும், அதன் பிறகும் பக்தர்கள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால், பல்வேறு இடங்களில் பக்தர்களின் கைகளிலும், முதுகு பகுதியிலும் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஒட்டி விடப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வட்டார போக்குவரத்து துறை சர்பில் நடந்த நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில், நடைபாதையாக வந்த பக்தர்களுக்கு ரிப்ளெக்டர் ஸ்டிக்கரை ஒட்டியதுடன் வழங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் வழங்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
காமெடி நடிகர் கோவை குணா மறைவு
பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு விசைத்தறி முதலாளிகளுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்தை
பூந்தமல்லியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தடை செய்யப்பட்டவைகளுக்கு பதிலாக மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள்: மாவட்ட கலெக்டர் தகவல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!