விருதுநகர் நகராட்சி பகுதியில் மூடிக் கிடக்கும் சமுதாயக் கூடங்களை திறக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
2023-02-04@ 11:43:50

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் மூடிக் கிடக்கும் சமுதாயக் கூடங்களை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் நகராட்சியில் நடுத்தர, அடித்தட்டு பொதுமக்களின் குடும்ப விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் சிறிய அளவிலான குடும்ப விழாக்களை குறைந்த வாடகையில் நடத்துவதற்காக தியாகி விஸ்வநாததாஸ் காலனி, நாராயணமடம் தெரு, அகமது நகரில் மாவட்ட மைய நூலகம் அருகே என 3 சமுதாயக்கூடங்கள் கட்டப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டன. நகர் மக்களின் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு குறைந்த வாடகையில் விடப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று சமுதாயக்கூடங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாமல் மூடி வைத்துள்ளனர்.
இதனால் நடுத்தர, அடித்தட்டு மக்களின் இல்ல விசேஷ நிகழ்ச்சிகளை நடத்த குறைந்த வாடகையில் மண்டபம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, நகரில் மூடிக்கிடக்கும் 3 சமுதாயக்கூடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் நீதிமய்ய மாவட்ட செயலாளர் காளிதாஸ் கூறுகையில், ‘சிரமப்படும் மக்களின் இல்ல நிகழ்ச்சிகளை குறைந்த வாடகையில் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட சமுதாய கூடங்கள் மூடியே கிடப்பதால் சிதிலமடைந்து வருகின்றன. பொதுமக்கள் பயன்படுத்தாத எந்த பொருளும் வீணாகி விடும். எனவே, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சமுதாயக் கூட்டங்களை உடனே சீரமைத்து வாடகையை மறுநிர்ணயம் செய்து விடுவதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
மேலும் செய்திகள்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்
ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்
திருத்துறைப்பூண்டி மனநல காப்பகத்தை சுகாதார துறை அதிகாரி ஆய்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி