SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவகாசியில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் மூலம் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்: பயணிகள் கோரிக்கை

2023-02-04@ 11:42:57

சிவகாசி: ஒன்றிய அரசின் அமிர்த் பாரத் ஸ்டேஷன்’ திட்டத்தில் சிவகாசி ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றிய அரசின் சார்பில் அதிக வருவாய் மற்றும் நகரங்களின் பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 1000 சிறிய ரயில் நிலையங்களில், புதிய நவீன வசதிகளை நீண்ட கால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக கடந்த டிசம்பர் மாதம் ‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்த சிறப்பு திட்டத்தின் கீழ், ஒரு ரயில்வே மண்டலத்தில் உள்ள பல்வேறு நகரங்களை இணைக்கும் மையமாக உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்த திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எக்ஸ்குலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம், ரயில் நிலையத்தின் வடிவமைப்பு, 5ஜி சேவை, நடைமேடைகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நீண்டகால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

15 ரயில் நிலையங்கள் தேர்வு:

இந்த திட்டத்தில் மதுரை மண்டலத்தில் உள்ள விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, புனலூர், கோவில்பட்டி, பழனி, ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, பரமக்குடி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர், மணப்பாறை, சோழவந்தான் ஆகிய 15 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், குட்டி ஜப்பான் என புகழப்படும் சிவகாசி ரயில் நிலையம் தேர்வு செய்யப்படவில்லை. இந்த அறிவிப்பு ரயில் பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. சிவகாசி நகரில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் நடைபெற்று வருகிறது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வியாபாரிகள் இந்த நகருக்கு வந்து செல்கின்றனர்.

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சிவகாசி மாநகர் ரயில் நிலையம் ஒன்றிய அரசின் அமிர்த் பாரத் ஸ்டேச்ன் திட்டத்தில் இணைக்கபடாதது பயணிகளுக்கு அதிர்ச்சியும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. எனவே, ஒன்றிய அரசு சிவகாசி ரயில் நிலையத்தை இந்த திட்டத்தில் சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே, கொல்லம் ரயில் சிவகாசியில் நின்று செல்வதில்லை. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம், ஒன்றிய அரசு பல முறை புகாரி தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் ரயில்நிலையம் ேமம்படுத்தும் திட்டத்திலும், சிவகாசி புறக்கணிக்கப்பட்டுள்ளது பயணிகளிடம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் சிவகாசி ரயில் நிலையத்தை சேர்த்து மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்