தைப்பூச திருவிழாவை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு
2023-02-04@ 11:38:07

கன்னியாகுமரி: தைப்பூச திருவிழாவை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை சந்தையிக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக பண்டிகை முஹுர்த்த நாட்கள் இல்லாததால் மலர் சந்தையில் பூக்கள் விலை குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் நாளை தைப்பூச திருவிழா என்பதாலும் தொடர்ந்து சுப முகூர்த்த தினங்கள் வருவதாலும் பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு தோவாளை மலர் சந்தையில் கிலோ 1க்கு ரூ.700 விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.1,750 ஆகவும், மல்லிகை ரூ.600 யில் இருந்து ரூ.1500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று செவ்வந்தி, அரளி, தாமரை, கேந்தி உள்ளிட்ட பூக்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகள்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்
ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்
திருத்துறைப்பூண்டி மனநல காப்பகத்தை சுகாதார துறை அதிகாரி ஆய்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி