SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்: அதிரடியா குறைந்த விலை.! சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680க்கு விற்பனை

2023-02-04@ 10:54:26

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.5,335க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.80 குறைந்து ரூ.74.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒன்றிய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, வெள்ளிக்கட்டிகள் மீதான அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டதுடன் தங்க நகைகள் இறக்குமதி வரியும் அதிரடியாக கூட்டப்பட்டது. பட்ஜெட்டின் தாக்கம் உடனடியாக தங்கம் விலையில் எதிரொலிக்க தொடங்கியது. இதன் காரணமாக தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது. அதாவது பவுன் ரூ.44 ஆயிரத்து 40-க்கும், ஒரு கிராம் ரூ.5,505-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.77.80 ஆக உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ. 65 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ. 43,520 விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.40 குறைந்து ரூ.76.40க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதாவது சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து 42,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 80 குறைந்து 5335க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்