உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை.!
2023-02-04@ 10:14:22

சென்னை: ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், காவலர்கள் யாரேனும் இறக்க நேரிட்டால் இறுதி சடங்குகளில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டுமென தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாநகர, மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எவரேனும் இறக்க நேரிட்டால், காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வண்ணம், இறுதி சடங்குகளில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்து கொண்டு காவல்துறை தலைமை இயக்குநர் சார்பாக மலர்வளையம் வைத்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
இதனை தவறாது கடைபிடிக்க ஏதுவாக அனைத்து காவல் நிலையங்களிலும், அந்த காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதிவேடு ஒன்று பராமரிக்க அறிவுறுத்த வேண்டும். இந்த பதிவேடு நிலைய எல்லையில் வாழும் ஓய்வு பெற்ற காவலர்கள் பதிவேடு என்று பெயரிடப்பட வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த பதிவேடு பராமரிக்கப்படுவதையும், காலம் சென்ற முன்னாள் காவலர்களுக்கு துறை ரீதியாக மரியாதை செய்யும் நிகழ்வுகளையும் உயர் காவல் அதிகாரிகள் ஆய்வின் போது சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
கடந்தாண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப் -4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
சாதாரண மனிதனுக்கு என்ன பொருந்துமோ, அது தான் ராகுல் காந்திக்கும்: சட்டத்தின் அடிப்படையிலேயே தகுதி நீக்கம்: அண்ணாமலை பேச்சு
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்கும் பொருட்கள் சேவை,வரி மற்றும் மின் வழிச்சீட்டு குறித்த இணையவழி பயிற்சி
ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை: சீமான் கடும் கண்டனம்..!
சென்னையில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணையவழி பயிற்சி
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி