புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து பள்ளி சீருடையில் சென்ற திமுக எம்எல்ஏக்கள்: 24 நிமிடங்களில் முடிந்தது குளிர்கால கூட்டம்
2023-02-04@ 00:37:59

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் பள்ளி சீருடையில் சட்டப்பேரவைக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் முதல்வர ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசு நடந்து வருகிறது. இம்மாநிலத்தின் 15வது சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ரங்கசாமி அரசு, பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்காததை கண்டித்து எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் பள்ளி சீருடை அணிந்து வந்து கலந்து கொண்டனர். காலை 9.30 மணிக்கு சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து அவையை துவக்கி வைத்தார். பின்னர், மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபத் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, எம்எல்ஏக்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அவை துவங்கியதும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வர வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை இல்லை. எல்லாவற்றையும் தலைமை செயலரே செய்வார் என்றால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எதற்கு? என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா கேள்வி எழுப்பினார். இதை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் ‘வேண்டும்... வேண்டும்... மாநில அந்தஸ்து வேண்டும்’ என கோஷமிட்டவாறு திமுக எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
இவர்களுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, 2022- 23ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மதிப்பீடுகளை காட்டுகின்ற அறிக்கையையும், 2022- 23ம் ஆண்டுகான துணை கொடைகளுக்கான கோரிக்கைகள் அவையில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இதனை குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் நிறைவேற்றினார். 9.30 மணிக்கு கூடிய சட்டசபை கூட்டம் 9.54 மணிக்கு நிறைவடைந்தது.
மேலும் செய்திகள்
தென் இந்தியாவில் முதல் முறையாக சங்கரன்கோவில் அருகே 120 அடி உயர உலக அமைதி கோபுரத்தில் புதியதாக புத்தர் சிலைகள் அமைப்பு: புத்த துறவிகள் பங்கேற்பு
தமராக்கி மஞ்சுவிரட்டு, ஆவியூர் ஜல்லிக்கட்டில் திமிலை உயர்த்தி திமிறிய காளைகளை தீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்கள்
திருவாரூர் கோயிலில் ஏப். 1ல் ஆழித்தேரோட்டம்: 5 தேர்களுக்கு சீலைகள் பொருத்தும் பணி தீவிரம்
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கொளுத்தும் வெயில் தாக்கத்திலிருந்து ஆடு, மாடுகளை பாதுகாக்க அசத்தல் ‘டிப்ஸ்’: விவசாயிகளுக்கு கால்நடைத்துறை அட்வைஸ்
அலங்காநல்லூர் அருகே பெரியாறு கால்வாய் பாலம் ‘டமால்’: இடிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு அவதி
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்