வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநிலத்தவர்கள் பெண் போலீசாரிடம் அத்துமீற முயன்றனர்: கிருஷ்ணகிரி எஸ்பி பேட்டி
2023-02-04@ 00:37:58

கிருஷ்ணகிரி: ‘வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநில இளைஞர்கள், உள்ளூர் பெண்கள் மற்றும் பெண் போலீசாரிடம் அத்துமீற முயன்றனர்’ என்று கிருஷ்ணகிரி எஸ்பி தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரியில், மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர், நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எருதாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில், உள்ளூரைச் சேர்ந்த பெண்களிடமும், பெண் போலீசாரிடமும் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அத்துமீறி நடக்க முயன்றனர்.
மேலும், அவர்கள் மீது கற்களை வீசியும், ஆபாசமான வார்த்தைகளாலும் பேசினர். இதனால் அவர்களை பிடித்து அமர வைத்தோம். அந்த நேரத்தில் நடந்த நிகழ்வை தான், எஸ்பி லத்தியால் அடிக்கிறார். பூட்ஸ் கால்களால் மிதிக்கிறார் என்று சிலர் தவறாக வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். உண்மையிலேயே அங்கு என்ன நடந்தது என்று அங்கிருந்த போலீசார், உள்ளூர் மக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தெரியும். இவ்வாறு எஸ்பி கூறினார்.
Tags:
வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநிலத்தவர்கள் பெண் போலீசாரிடம் அத்துமீற முயன்றனர்: கிருஷ்ணகிரி எஸ்பி பேட்டிமேலும் செய்திகள்
தமிழக அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது.! பாஜகவிற்கு கூண்டுக்குள் இருந்து, வெளியே வரும் நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை பேச்சு
கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
நாட்றம்பள்ளி தாலுகாவில் குறவர் இன மக்களுக்கு ஜாதி சான்று வழங்க வேண்டும்-தாசில்தாரிடம் மனு
திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் அணையில் ₹5.97 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு
ஜோலார்பேட்டை அருகே அடிக்கடி ரயில்வே கேட் மூடுவதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி-மேம்பாலம் அமைக்க கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து நல்வழிப்படுத்த வேண்டும்-கல்லூரி முதல்வர்களுக்கு எஸ்பி அறிவுரை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி