தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் பழநி கோயிலில் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்: பறவைக்காவடி எடுத்து வந்து பரவசம்
2023-02-04@ 00:37:57

பழநி: பழநி மலைக்கோயில் தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைக்காண சுமார் 5 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த ஜன. 29ம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி தினமும் காலையில் தந்த பல்லக்கிலும், இரவில் ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்கக்குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு இரவு 7.30 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோயிலில் நடந்தது. வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்தனர். தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு சுவாமி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. பழநி நகரில் நேற்று காலையில் இருந்தே தூறல் மழை பெய்தது. எனினும் தைப்பூசத்தையொட்டி காலை முதலே பழநியில் பக்தர்கள் குவிய துவங்கினர். அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவைக்காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வந்தனர். காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் போன்றவை காண்போரை பரவசமடைய செய்தது.
பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வந்தும், கும்மியடித்தும் வழிபாடு நடத்தினர். வின்ச், ரோப்கார் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர். பழநியில் நேற்று ஒரே நாளில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவயொட்டி, பழநியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் முதலுதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. பக்தர்களின் உடைமைகள், குழந்தைகள் காணாமல் போனால் அறிவிப்பது, பக்தர்களின் சந்தேகத்தை தீர்ப்பது என 26 இடங்களில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணிநேரமும் போலீசார் பணியில் இருப்பார்கள். பாதயாத்திரை வழித்தடங்களில் 3 கிமீக்கு ஒரு பைக் என்ற விகிதத்தில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தைப்பூச திருவிழாவையொட்டி டிஐஜி அபிநவ்குமார் தலைமையில் 2,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் செய்திகள்
தமிழக அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது.! பாஜகவிற்கு கூண்டுக்குள் இருந்து, வெளியே வரும் நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை பேச்சு
கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
நாட்றம்பள்ளி தாலுகாவில் குறவர் இன மக்களுக்கு ஜாதி சான்று வழங்க வேண்டும்-தாசில்தாரிடம் மனு
திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் அணையில் ₹5.97 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு
ஜோலார்பேட்டை அருகே அடிக்கடி ரயில்வே கேட் மூடுவதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி-மேம்பாலம் அமைக்க கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து நல்வழிப்படுத்த வேண்டும்-கல்லூரி முதல்வர்களுக்கு எஸ்பி அறிவுரை
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி