நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
2023-02-04@ 00:37:54

நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஈரோடு சூரம்பட்டி பூசாரி சென்னிமலை வீதியில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக ஈரோடு மாநகராட்சி அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஈரோடு அரசு மருத்துவமனை அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஊர்வலத்துக்கு அனுமதி கிடையாது என்று கூறினர்.
இருப்பினும், அதையும் மீறி நாம் தமிழர் கட்சியினர் கைகளில் கரும்புகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். இதனால், ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார், தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உட்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாக பொறுப்புகள் கலைப்பு: புதியமாவட்ட தலைவராக தரணி. R. முருகேசன் நியமனம்
ஒரே மேடையில் பாஜக எம்பி, எம்எல்ஏவுடன் பலாத்கார குற்றவாளி: திரிணாமுல் எம்பி காட்டம்
வாரிசு அரசியலை எதிர்க்கும் நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் மகளுக்கு பாஜகவில் முக்கிய பதவி
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போலவே கருப்பு உடையில் வந்த பாஜ பெண் எம்எல்ஏ
ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி... டிஎன்பிஎஸ்சி அதிகாரியிடம் விளக்கம் கேட்பு : அமைச்சர் பழனிவேல் தியாகவேல் விளக்கம்!!
ராகுல் காந்தி பதவி பறிப்பை தொடர்ந்து எம்பி பதவியிலிருந்து என்னை தகுதி நீக்கம் செய்ய சதி: சஞ்சய் ராவத் பேட்டி
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்