அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணி ஜெயக்குமார்: கு.ப.கிருஷ்ணன் ஒரே போடு
2023-02-04@ 00:37:53

ஈரோடு முனிசிபல் காலனியில் அதிமுக ஓபிஎஸ் அணியின் தேர்தல் பணி மனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதை ஓபிஎஸ் அணியின் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்கள் அமைத்திருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி. இபிஎஸ் அணியினர் அமைத்துள்ளது முற்போக்கு கூட்டணி.
அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணியே (நோய்) முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்தான். எங்கள் பக்கம் 99 சதவீத தொண்டர்கள் உள்ளனர். அதை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் வந்தால் நிரூபித்து காட்டுவேன். ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தாலும் எங்களது வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதி.இவ்வாறு கு.ப.கிருஷ்ணன் கூறினார்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை குடந்தையில் கே.எஸ்.அழகிரி ரயில் மறியல்: நாகையில் மோடி உருவபொம்மை எரிப்பு; தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான காங்கிரசார் கைது
ஓபிஎஸ்சுக்கு ஆதரவா? சசிகலா பேட்டி
ராகுலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
வெடிவிபத்து நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ் அழகிரி வலியுறுத்தல்
என்எல்சி சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க முடியாது: பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை
பட்டாசு ஆலை வெடி விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி