அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
2023-02-04@ 00:37:52

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று தனது தேர்தல் நடத்தும் அலுவலரான சிவகுமாரிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, எம்பிக்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் தனிப்பட்ட மனிதர் வெற்றி அடைவதைவிட மதச்சார்பற்ற சக்திகளின் வேட்பாளர் வெற்றி பெற விரும்புகிறேன். என் மகன் திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை தொடர விரும்புகிறேன்.
மாவட்ட அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து ஈரோட்டுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து எனது மகன் திருமகன் ஈவெரா பட்டியல் தயாரித்துள்ளார். அதில், பல பணிகளை செய்துள்ளார். மீதம் உள்ளவற்றை மேற்கொள்ள நான் பாடுபடுவேன். திமுகவினர் மிகச்சிறப்பாக தேர்தல் பணி செய்து வருகின்றனர். வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்பே எனக்காக வாக்கு கேட்டனர். இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஈரோட்டிற்கு நல்ல காரியம் செய்யவே நான் போட்டியிடுகிறேன். யார் எதிர்க்கிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. பாஜ தலைவர் அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்லி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை குடந்தையில் கே.எஸ்.அழகிரி ரயில் மறியல்: நாகையில் மோடி உருவபொம்மை எரிப்பு; தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான காங்கிரசார் கைது
ஓபிஎஸ்சுக்கு ஆதரவா? சசிகலா பேட்டி
ராகுலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
வெடிவிபத்து நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ் அழகிரி வலியுறுத்தல்
என்எல்சி சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க முடியாது: பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை
பட்டாசு ஆலை வெடி விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி