SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்ககளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

2023-02-03@ 17:49:00

சென்னை: திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழ்நாடு அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்திய நிலையில் அந்த மாவட்ட ஆட்சியர்கள் தற்போது இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக உள்ள பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக உள்ள வளர்மதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக உள்ள அமர் குஷ்வாஹா சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்துள்ளனர்.

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜனவரி 1 ஆம்  தேதி வெளியான அறிவிப்பில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஆகியவை தொடர்பான விவரங்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த ஜனவரி 30-ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்