போலீஸ் அதிகாரி எனக்கூறி கொண்டு 6 பெண்களை திருமணம் செய்த ‘கில்லாடி’ கைது: 7வது முயற்சியின் போது போலீசில் சிக்கினார்
2023-02-03@ 16:01:01

பொகாரோ: ஜார்கண்டில் போலீஸ் அதிகாரி எனக்கூறி 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த அஸ்லம் கான் என்பவர், 7வது முறையாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போது கைது செய்யப்பட்டார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த அஸ்லம் கான் (50) என்பவர், தன்பா அடுத்த பூலியில் வசித்து வருகிறார். இவர் போலீஸ் அதிகாரி போல் நடித்து பல பெண்களை ஏமாற்றி உள்ளார். அவர்களில் 6 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். 7வது முறையாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போலீசில் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து நகர போலீஸ் டி.எஸ்.பி குல்தீப் குமார் கூறுகையில், ‘தன்னை போலீஸ் அதிகாரி எனக் கூறி, வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த 6 பெண்களை ஏமாற்றி அஸ்லம் கான் திருமணம் செய்துள்ளார். புதியதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பின்னர், அவருடன் கொஞ்ச நாட்கள் வாழ்ந்துவிட்டு பின்னர் அவரை கழற்றிவிடுவார்.
இவ்வாறாக 6 பெண்களை ஏமாற்றி உள்ளார். இதற்காக மாற்ற தனது பெயரை மாற்றி ஏமாற்றியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நம்பவைக்கும் வகையில், தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறியுள்ளார். அவர்கள் சந்தேகம் அடைந்தால், அவர்களுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். அஸ்லம் கான் மீது சாஸ், தன்பாத், டோப்சாச்சி, ராஞ்சி ஆகிய காவல் நிலையங்களில் திருமண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2021ம் ஆண்டில் அஸ்லம் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், ஏழாவதாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். தொடர்ந்து அவரால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து பெண் பலாத்காரம் நிறுவன அதிகாரிக்கு 10 ஆண்டு சிறை
பிளஸ்2 மாணவியை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர்: விசாரணையின் போது எஸ்கேப்
ஆருத்ரா நிதி நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி முக்கிய குற்றவாளியான பாஜ நிர்வாகி ஹரிஷ் கைது: ரகசிய இடத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை
சிறுவனுக்கு செக்ஸ் டார்ச்சர் வாலிபர் போக்சோவில் கைது: உடலில் கடித்து காயப்படுத்திய கொடூரம்
ரவுடியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி