கட்சி தலைமையிடம் அதிருப்தி ஏற்படுத்த சோனியாவுக்கு போலி கடிதம் எழுதுவது யார்? போலீசில் புகாரளிக்க உள்ளதாக மாஜி முதல்வர் ஆவேசம்
2023-02-03@ 15:57:49

பெங்களூரு: காங்கிரஸ் தலைமையிடம் உள்ள உறவை கெடுக்கும் வகையில் போலி கடிதம் எழுதும் நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளதாக கர்நாடகா முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா, தனது பெயரில் காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதி, தனக்கும் தலைமைக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கடிதத்தின் நகலை வெளியிட்டு மேலும் அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைமைக்கு நான் எந்தவொரு கடிதத்தையும் எழுதவில்லை. எனக்கும் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும், தேசிய தலைமைக்கும் இடையே உள்ள உறவை கெடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறாக அடிக்கடி போலி கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து போலீசில் புகார் அளிக்க உள்ளேன். அப்போது தான் போலி கடிதம் எழுதிய நபர்கள் அடையாளம் காணப்படுவார்கள்’ என்றார். சித்தராமையா வெளியிட்ட கடிதத்தில், சோனியா காந்திக்கு அவர் எழுதியதாகவும் அதில், ‘வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளது; இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. எனவே சித்தராமையாவின் கடித விவகாரம் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை
ஒரு மணி நேரம் தேவையற்ற மின்பயன்பாட்டை தவிர்த்திடுக : பூமிநேரம் தினத்தை முன்னிட்டு கடற்கரையில் பிரம்மாண்ட மணற்சிற்பம்!!
ஒயிட்ஃபீல்டு முதல் கிருஷ்ணராஜபுர வரையிலான பெங்களூரு மெட்ரோ ரயில் வழித்தடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பயணம்!!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய சோகாதாரத்துறை கடிதம்
36 செயற்கைகோளுடன் LVM3-M3 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் தொடங்கியது!!!
இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை தகுதி நீக்க நடவடிக்கையில் சிக்கிய தலைவர்கள்..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி