SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமழிசையில் மண்புழு உரம் தயார் செய்யும் பணி

2023-02-03@ 15:51:42

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் உள்ள வளமீட்பு பூங்காவில் நடக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர்  மு.மாகின் அபுபக்கர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மக்கும் குப்பைகளான காய்கறி மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டார்.மக்காத குப்பைகளான துணி, செருப்பு, பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் ஆகியவற்றை தரம்பிரித்து மறுசுழற்சி செய்ய அனுப்பி வைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.  மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து கொடுக்கவேண்டும் என ஒவ்வொரு வீட்டிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

மேலும் மண் புழு உரம் தயார் செய்யும் பணிகளையும் பார்வையிட்டு, அறிவுரை, ஆலோசனை வழங்கினார்.  பணிகளை திறன்படவும், தொய்வின்றியும் விரைவாக உரிய நேரத்தில் முடிக்குமாறு கூறினார். பணியாளர்கள் தேவையான பாதுகாப்பு உடைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.  ஆய்வின்போது, பேரூராட்சி தலைவர் உ.வடிவேலு, உதவி செயற்பொறியாளர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் தா.மாலா, உதவி பொறியாளர் இரா.சுபாஷினி, துப்புரவு மேற்பார்வையாளர் வே.பாண்டியன், திமுக நிர்வாகி வேலு மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்