‘பாதயாத்திரைக்கு வாங்க சார்...’தெலங்கானா முதல்வருக்கு ஷூவை பரிசு அனுப்பிய ஷர்மிளா
2023-02-03@ 15:46:17

திருமலை: தெலங்கானா மாநில ஒய்எஸ்ஆர் கட்சியின் தலைவர் ஷர்மிளா நேற்று முதல்வர் சந்திரசேகர ராவுக்கு (கேசிஆர்) பரிசாக அனுப்புவதாக கூறி ஒரு ஜோடி ஷூக்களை ஐதராபாத்தில் நிருபர்களிடம் காண்பித்தார். அப்போது அவர் கூறியதாவது: தனது ஆட்சி அற்புதமாக இருப்பதாக முதல்வர் சந்திரசேகரராவ் கூறி வருகிறார். தெலங்கானாவில் எந்த பிரச்னையும் இல்லை என நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். இது உண்மை இல்லை என்றால் முதல்வர் சந்திரசேகரராவ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
சந்திரசேகரராவ் பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார். ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சந்திரசேகரராவுக்கு தைரியமும், ஆட்சியில் நம்பிக்கையும் இருந்தால் ஒரு நாள் பாதயாத்திரைக்கு என்னுடன் வர வேண்டும். இதற்காக தான் ஷூ பாக்ஸ் பிரகதி பவனுக்கு (முதல்வர் முகாம் அலுவலகத்துக்கு) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கால் சைஸ் சரியாக இல்லாவிட்டால் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள பில் கூட அனுப்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை
ஒரு மணி நேரம் தேவையற்ற மின்பயன்பாட்டை தவிர்த்திடுக : பூமிநேரம் தினத்தை முன்னிட்டு கடற்கரையில் பிரம்மாண்ட மணற்சிற்பம்!!
ஒயிட்ஃபீல்டு முதல் கிருஷ்ணராஜபுர வரையிலான பெங்களூரு மெட்ரோ ரயில் வழித்தடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பயணம்!!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய சோகாதாரத்துறை கடிதம்
36 செயற்கைகோளுடன் LVM3-M3 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் தொடங்கியது!!!
இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை தகுதி நீக்க நடவடிக்கையில் சிக்கிய தலைவர்கள்..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி