குண்டுவெடிப்பில் 101பேர் பலி எதிரொலி; பாகிஸ்தானில் போலீசுக்கே பாதுகாப்பில்லை: ஆர்ப்பாட்டத்தில் குதித்த போலீசார்
2023-02-03@ 15:38:58

பெஷாவர்: பாகிஸ்தான் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து போலீசாருக்கே பாதுகாப்பில்லை எனக்கூறி பெஷாவர் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 101 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் ஆவர். குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய தீவிரவாதி, போலீஸ் சீருடையில் மசூதிக்குள் புகுந்து தொழுகை நடந்து கொண்டிருந்த போது தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறி, பெஷாவர் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘எங்களின் கைகளை பாகிஸ்தான் அரசு கட்டிப்போட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் போலீஸ்காரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார்கள். அந்த அதிர்ச்சியில் இருந்து எங்களால் மீள முடியவில்லை. போலீஸ்காரர்களுக்கே பாதுகாப்பு இல்லாதபோது, நாட்டில் யார் தான் பாதுகாப்பாக இருக்க முடியும்’ என்று கூறினர்.
மேலும் செய்திகள்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசு ஊழியர்கள் சீனாவின் `டிக்-டாக்’ செயலியை பயன்படுத்த தடை!
பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டிவிட்டரில் தகவல்!!
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.31 கோடியாக அதிகரிப்பு
உலக நாடுகள் மாசு பட்டியல் வெளியீடு: முதல் 100 நகரங்களில் இடம்பிடித்த 65 இந்திய நகரங்கள் மோசம்.! சுவிஸ் ஆய்வு நிறுவனம் பகீர் தகவல்
ட்விட்டரில் பணம் செலுத்தாமல் உள்ள பயனர்களின் ப்ளூ டிக்குகளை, ஏப்ரல் 1-ம் தேதிக்குள் நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி