SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்னைத் தமிழ் நிலத்திற்குப் பெயரை மீட்டளித்தவரின் நினைவாக என்றும் மிளிர்கிறது நம் தமிழ்நாடு: அண்ணா நினைவு நாளையொட்டி கனிமொழி எம்பி ட்வீட்

2023-02-03@ 15:30:27

டெல்லி: அன்னைத் தமிழ் நிலத்திற்குப் பெயரை மீட்டளித்தவரின் நினைவாக என்றும் மிளிர்கிறது நம் தமிழ்நாடு என அண்ணா நினைவு நாளையொட்டி கனிமொழி எம்பி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் இருந்து அமைதி பேரணி நடைபெற்றது. பேரணிக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்நிலையில் அறிஞர் அண்ணாவின் 54வது நினைவுநாளை முன்னிட்டு, டெல்லியில் அண்ணா - கலைஞர் அறிவாலயத்திலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக எம்.பி., கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்; திராவிட இயக்க வரலாற்றின் ஒப்பற்ற அரசியல் ஆளுமை; தமிழ்ச் சமூகத்தின் தன்மீட்சிக்குக் காலமெல்லாம் உழைத்த பெருந்தகை; கூட்டாட்சித் தத்துவம் காத்திட, மாநிலம் தாண்டித் துணை நிற்பவர் நம் அண்ணா. அன்னைத் தமிழ் நிலத்திற்குப் பெயரை மீட்டளித்தவரின் நினைவாக என்றும் மிளிர்கிறது நம் தமிழ்நாடு. பேரறிஞரின் நினைவுநாளான இன்று டெல்லி அண்ணா - கலைஞர் அறிவாலயத்திலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மரியாதை செலுத்தினோம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்