இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்..!
2023-02-03@ 14:36:40

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7A-ன் கீழ், திருப்பூர் மற்றும் பெரம்பலூர் வருவாய் மாவட்டங்களின் எல்லைக்குட்பட்ட சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்களைத் தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை (Non Hereditary Trustees) நியமனம் செய்திட தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களை கொண்ட மாவட்டக் குழுக்கள் அமைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டக் குழுவின் தலைவராக க.சுப்பிரமணியம், உறுப்பினர்களாக ப.கலைச்செல்வி, இராம.முத்துராமன் ப.ஜெகநாதன், க.சாமி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டக் குழுவின் தலைவராக ஆ.கலியபெருமாள், உறுப்பினர்களாக மா.சண்முகம், டி.கே.இராமச்சந்திரன், திரு.சி.பாஸ்கர், சே.கோகிலா ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்குழுவினர் அந்தந்த வருவாய் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவுகள் 49 (1), 46 (i), 46(ii) - ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள திருக்கோயில்களின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதிவாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பார்கள். தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7A(2) -ன்படி இக்குழுக்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
குறும்படங்கள் வாயிலாக போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!!
குஷ்புவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிக்கு ஆபத்து?: 'மோடி' பெயரை விமர்சித்த டிவீட்டை வைரலாக்கிய நெட்டிசன்கள்
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்
ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் :உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி