அதிமுக சார்பில் ஒரே அணியாக ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு: அண்ணாமலை பேட்டி
2023-02-03@ 13:02:46

சென்னை: உறுதியான, நிலையான அதிமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தேவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பன்னீருடன் சமரசம் செய்துகொள்ள பழனிசாமி இறங்கி வராததால் தமது நிலையை அறிவிக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது. இன்று காலை எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தை சந்தித்தது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய அண்ணாமலை, உறுதியான, நிலையான வேட்பாளரை நிறுத்த வேண்டியது அவசியம் என அதிமுகவிடம் வலியுறுத்தினோம். அதிமுக சார்பில் ஒரே அணியாக ஒரே வேட்பாளர் நிறுத்துவது அவசியம் என்பதை பன்னீர், பழனிசாமியிடம் கேட்டுக் கொண்டோம். ஒன்றிணைய வேண்டும் என பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா கூறியதை பழனிசாமி, பன்னீர் ஆகியோரிடம் எடுத்து கூறினோம். வரும் 7ம் தேதி வரை அவகாசம் இருப்பதால் பாஜகவின் நிலைப்பாடு பின்னர் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். அதிமுக ஒரே அணியாக நிற்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துவதால் பழனிசாமி அணி அதிர்ச்சியடைந்துள்ளது. பன்னீருடன் சமரசமாக செல்லுமாறு பாஜக தலைமை வற்புறுத்துவதால் பழனிசாமி ஏமாற்றம் அடைந்துள்ளார்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
குறும்படங்கள் வாயிலாக போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!!
குஷ்புவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிக்கு ஆபத்து?: 'மோடி' பெயரை விமர்சித்த டிவீட்டை வைரலாக்கிய நெட்டிசன்கள்
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்
ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் :உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி