புதுச்சேரியில் பெண்கள் போலீசார் இடையே தள்ளு முள்ளு
2023-02-03@ 12:35:30

புதுச்சேரி: புதுச்சேரியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மதுபான விடுதிகளை மூட கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினர காவல்துறையினர் தடுத்தால் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்ற அனைத்து மகளிர் கூட்டமைப்பினரை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடத்தனர். அவர்கள் தடையை மீறிய போது தள்ளு, முள்ளு ஏற்பட்டது. அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மதுபான கேளிக்கை விடுதிகளை மூட வேண்டும் என்றும் மூடப்பட்ட நியாயவிலை கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார். மின்கட்டணம், சமையல் எரிவாய்வு, காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்தாத அரசு மதுபான கேளிக்கை விடுதிகளை மட்டும் திறப்பதாக மகளிர் அமைப்பினர் கூற்றம் சாட்டினார். சலுகைகள் இல்லாத புதுச்சேரியை விட்டு தமிழ்நாட்டிற்கு குடிபெயர போவதாக அவர்கள் தெரிவித்தனர். காவல்துறையினர் சமாதானம் செய்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கலைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் டிஜிபி, ஐஜி அதிரடி ஆய்வு
கைத்தறி பெட்ஷீட்டில் ஒருபுறம் தோனி மறுபுறம் விராட் கோலி உருவப்படம்: நெசவாளர் அசத்தல்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி பலி: உரிமையாளர் சிறையில் அடைப்பு
செங்கல்பட்டு அருகே புக்கத்துறை - உத்திரமேரூர்சாலையை இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுவதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
திருச்சில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது காவல்துறை வழக்குப்பதிவு
நாங்குநேரி - மேலப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி