அதானி விவகாரம்: எதிர்கட்சிகளின் அமளி காரணமாக 2வது நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது..!
2023-02-03@ 12:16:19

டெல்லி: எதிர்கட்சிகளின் அமளி காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் மக்களவை தேர்தலுக்கு முன்பு மோடி அரசின் கடைசி முழுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. நேற்று மக்களவை கூடியதும் காங்கிரஸ், திமுக, சிவசேனா, இடதுசாரி எம்பிக்கள், ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, கேரளா காங்கிரஸ், ஐயுஎம்எல் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து அதானி குழும பங்கு முறைகேடு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தினர்.
இதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி வழங்க மறுத்தார். ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பதிலுக்கு பா.ஜ எம்பிக்களும் கோஷம் எழுப்பியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோது தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்தது.
அதை தொடர்ந்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அதானி நிறுவன விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் 2வது நாளாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை பிற்பகல் 2:30 மணி வரைக்கும், மக்களவை 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியாவில் விரைவில் 6ஜி தொலை தொடர்பு சேவை: பிரதமர் மோடி அறிவிப்பு!!
திடிரேன பற்றி எரிந்த குழந்தைகள் ஐசியூ: நல்வாய்ப்பாக 7 குழந்தைகள் உயிர் தப்பின
பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி: உலகம் முழுவதும் ஒலிபரப்ப பாஜக முடிவு
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.6,500-ஆக உயர்வு: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்
சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை எப்போது?.. ஒன்றிய அரசு பதில்
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராஜஸ்தான் அரசின் சுகாதார உரிமை மசோதா: அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!