ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மீனவர் வலையில் சிக்கிய ஆளில்லா குட்டி விமானம்: அமெரிக்காவை சேர்ந்தது
2023-02-03@ 11:59:39

திருமலை: ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மீனவர் வலையில் அமெரிக்காவை சேர்ந்த ஆளில்லா குட்டி விமானம் சிக்கியது. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சந்தபொம்மாலி அருகே கடலில் தினமும் ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். அதன்படி, நேற்றும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க தங்களது படகுகள் மூலமாக சென்றுள்ளனர். அப்போது, ஒரு மீனவருக்கு 9 அடி நீளம் 111 கிலோ எடை உள்ள ஆளில்லா விமானம் சிக்கியது. இதனை அந்த மீனவர் கடற்கரைக்கு கொண்டு வந்து கடலோர காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். இந்த ஆளில்லா விமானம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த ஆளில்லா விமானத்தை யார் பயன்படுத்தினார்கள்?, எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவை ராணுவ பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம் என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற விமானம் இந்திய ராணுவம் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் உள்ள ராணுவத்தின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகளுக்கும், புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் உள்ள தலபாடா கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடற்கரையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் மீன் பிடிக்க சென்றபோது ஆளில்லா விமானம் கிடைத்தது. அது இந்திய விமானப்படையின் ஐஏஎப் ரேடார் அளவுத்திருத்த பயிற்சியின் ஒரு பகுதியாக ட்ரோன் பறக்க விடப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய விமானப்படை அதிகாரிகள் வழக்கமாக விமானத்தில் இருந்து வான் ஏவுகணையை உண்மையான ஏவுகணைக்கு செல்வதற்கு முன் போர் விமானத்தில் உள்ள ரேடார் மூலம் அதை அளவீடு செய்ய இலக்கு ட்ரோன்களை பறக்க விடுவார்கள். இதுவும் அதுபோன்றது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்
ராகுலின் குரலை ஒடுக்க பாஜக சதி; நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம்: அபிஷேக் மனு சிங்வி பேட்டி
ராகுல் காந்தி சிறை, அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
எத்தனை சதி செய்தாலும் ராகுல் காந்தி போராட்டத்தை தொடர்வார்; தொடர்ந்து சண்டை செய்வோம்: காங்கிரஸ் ட்வீட்
சிறை தண்டனை அனுபவித்து வரும் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்: கணவர் குறித்து உருக்கமான பதிவு
ராகுலின் தகுதிநீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமானது; எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் பாஜக: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி