அபுதாபியில் இருந்து புறப்பட ஏர் இந்தியா விமானதில் நடுவானில் தீ: அவசரமாக தரையிறக்கம்
2023-02-03@ 10:52:58

அபுதாபி: அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் எண் 1-ல் (இடது இன்ஜின்) நடுவானில் தீப்பிடித்தது. இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
கோழிக்கோடு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் அபுதாபி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிறகு 1000 அடி உயரத்தில் அதன் இன்ஜின் பகுதியில் தீப்பிடித்தது. தீ பற்றி அறிவிக்கப்பட்டதை அடுத்து விமானத்தில் 'முழு அவசரநிலை' அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக அவசர தரையிறக்கம் செய்யப்பட்டடு அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் VT-AYC இயக்க விமானம் IX 348 (அபுதாபி-கோழிக்கோடு) நடுவானில் 1000 அடியில் காற்ரின் திசை மாறுபாடு காரணமாக இன்ஜின் எண் 1-ல் வெடிப்பு ஏற்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசு ஊழியர்கள் சீனாவின் `டிக்-டாக்’ செயலியை பயன்படுத்த தடை!
பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டிவிட்டரில் தகவல்!!
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.31 கோடியாக அதிகரிப்பு
உலக நாடுகள் மாசு பட்டியல் வெளியீடு: முதல் 100 நகரங்களில் இடம்பிடித்த 65 இந்திய நகரங்கள் மோசம்.! சுவிஸ் ஆய்வு நிறுவனம் பகீர் தகவல்
ட்விட்டரில் பணம் செலுத்தாமல் உள்ள பயனர்களின் ப்ளூ டிக்குகளை, ஏப்ரல் 1-ம் தேதிக்குள் நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி