மோட்டார் வாகன சட்டப்படி சரியாக இல்லாத நம்பர் பிளேட் 27,891 வாகனங்கள் மீது வழக்கு
2023-02-03@ 00:32:12

சென்னை: மோட்டார் வாகன சட்டம் 50 மற்றும் 51ன் படி வாகனங்களுக்கு பதிவு எண்கள் தகடுகளின் அளவு மற்றும் பதிவு எண்கள் தகடுகளில் தலைவர்கள் படங்கள், வாசகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 31 மற்றும் 1ம் தேதிகளில் போக்குவரத்து போலீசார் அதிரடியாக மாநகரம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முறையான பதிவு எண்கள் இல்லாத வகையிலும், கவிதைகள் எழுதப்பட்ட வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், மோட்டார் வாகன சட்டப்படி முறையான பதிவு எண்கள் இல்லாத 11,784 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். அதேபோல், கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் மாநகரம் முழுவதும் நடந்த சோதனையில் 16,107 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த வகையில் மாநகரம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் பதிவு எண்கள் இல்லாத 27,891 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து ள்ளனர்.
Tags:
According to the Motor Vehicle Act number plate 27 891 vehicles case மோட்டார் வாகன சட்டப்படி நம்பர் பிளேட் 27 891 வாகனங்கள் வழக்குமேலும் செய்திகள்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
குறும்படங்கள் வாயிலாக போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!!
குஷ்புவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிக்கு ஆபத்து?: 'மோடி' பெயரை விமர்சித்த டிவீட்டை வைரலாக்கிய நெட்டிசன்கள்
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்
ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் :உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி