அரசுப் பள்ளி மாணவியர்களின் தற்காப்பு கலை பயிற்சிக்கு ரூ.1,838 லட்சம் ஒதுக்கீடு
2023-02-03@ 00:32:00

சென்னை: தமிழ்நாட்டில் 6744 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க ரூ.1,838 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய கல்வி அமைச்சக திட்ட ஏற்பளிப்பு குழு ஒப்புதலின்படி 6,744 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு கணக்கிட்டு ரூ.1011 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 5519 உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்கும் பயிற்சி அளிக்க ரூ.827.85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் மாணவியருக்கு கராத்தே, ஜூடோ, டேக்வண்டோ, சிலம்பம் ஆகிய தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி 2022-23 கல்வி ஆண்டிலும், மாவட்ட உடற்கல்வி ஆய்வர்கள் உதவியோடு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வாரம் இரண்டு நாட்கள் மாலையில் ஒரு மணி நேரம் என்ற வீதத்தில் மூன்று மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் அமைக்கப்படும் குழுவினர், தற்காப்பு கலை வல்லுநர்களை தேர்வு செய்து தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Government school girls martial arts training Rs.1 838 lakh அரசுப் பள்ளி மாணவியர் தற்காப்பு கலை பயிற்சி ரூ.1 838 லட்சம்மேலும் செய்திகள்
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நிதி ஆயோக் தலைவர், குழுவினர் சந்திப்பு..!!
உகாதி திருநாள் புத்தாண்டை, நாளை கொண்டாடும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
காவல் துறை ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு முகாம்: போலீசாரின் வாரிசுகள் 123 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை!
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023; கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் மரியாதை செய்தார்!
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!