பட்ஜெட்டில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி: அன்புமணி குற்றச்சாட்டு
2023-02-03@ 00:31:55

செய்யாறு: ஒன்றிய பட்ஜெட்டில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுக்கா புதுப்பாளையம் கூட்டு சாலையில் பாமக சார்பில் 2.0 விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், ‘குட்கா தடை சட்டம் தமிழகத்தில் செல்லாது என்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேதனை அளிக்கிறது. ஒன்றிய அரசு குட்கா தடைக்கு அவசர சட்டத்தை கொண்டு வரவேண்டும். 2 மாதத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கு காரணம் ஆளுநர்தான். தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்ததும் ஒரு சொட்டு மதுகூட இல்லாத பூரண மதுவிலக்குக்கு தான் முதல் கையெழுத்து’ என்றார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் ‘‘தமிழ்நாட்டை சார்ந்த திட்டங்களான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 6 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ள நிலையில் நமக்கு நிதி ஒதுக்கவில்லை. தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களுக்கு நிறைய நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டிற்கு கூடுதலாக நிதியை ஒதுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். செய்யாறை தலைமை இடமாக்கி புது மாவட்டம்: பாமக கூட்டத்தில், ‘மிகப்பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். செய்யாறை தலைமை இடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:
Budget election state finance Anbumani allegation பட்ஜெட்டில் தேர்தல் மாநில நிதி அன்புமணி குற்றச்சாட்டுமேலும் செய்திகள்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேறியது... மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
'மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது' ...ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதலமைச்சர் மீது பொறாமையுடனும் அரசியல் காழ்புணர்ச்சியுடனும் பழனிசாமி அறிக்கை வெளியிடுகிறார் : அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்
பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நிகழும் வெடி விபத்துகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்!!
சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்: சரத்குமார் அறிவிப்பு
பட்டாசு ஆலைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!