மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2023-02-03@ 00:31:28

ஷில்லாங்: மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மாவுக்கு எதிராக, முன்னாள் தீவிரவாதி பெர்னார்ட் மராக்கை பாஜ களமிறக்குகிறது. இதேபோல் நாகாலாந்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலையும் பாஜ வௌியிட்டுள்ளது. 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு இம்மாதம் 27ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில் மேகாலயாவில் ஆளும் கட்சியுடனான கூட்டணியில் இருந்து பிரிந்து 60 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட பாஜ முடிவு செய்துள்ளது.
நாகாலாந்தின் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜ 20 இடங்களிலும்,. மீதமுள்ள 40 இடங்களில் பாஜ கூட்டணி கட்சியான என்பிடிடி கட்சியும் போட்டியிடுகிறது. தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மேகாலயா, நாகாலாந்து வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை பாஜ வௌியிட்டுள்ளது. அதன்படி, மேகாலயாவின் தெற்கு துரா தொகுதியில் போட்டியிடும் முதல்வர் கான்ராட் கே சங்மாவுக்கு எதிராக, மாநில பாஜ துணைத்தலைவரும், முன்னாள் தீவிரவாத இயக்க தலைவருமான பெர்னார்ட் மராக் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதைய எம்எல்ஏக்கள் சன்போர் ஷுல்லாய் தெற்கு ஷில்லாங் தொகுதியிலும், ஏ.எல்.ஹெக் பைந்தோருக்ரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். நாகாலாந்து மாநில பாஜ தலைவர் தெம்ஜென் இம்னா அலோங், அலோங்டாகி தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து நேற்று நிருபர்களிடம் பேசிய பாஜ செயலாளரும், வடகிழக்கு மாநில இணைபொறுப்பாளருமான ரிதுராஜ் சின்கா, “மோடி சக்தி என்ற அடிப்படையில் மேகாலாயாவின் 60 தொகுதிகளிலும் பாஜ பிரசாரம் செய்யும். ஒன்றிய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்தாலும் ஊழலால் சோர்ந்து போயுள்ள மேகாலயா மக்கள் ஊழலற்ற ஆட்சி, விரைவான வளர்ச்சி தரக்கூடிய ஒரே நபர் என பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
* நாகாலாந்தில் 16 எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை
நாகாலாந்தில் பா.ஜ தலைமையிலான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக நெய்பியு ரியோ உள்ளார். நேற்று 40 தொகுதியில் போட்டியிடும் பா.ஜ கூட்டணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் 16 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வடக்கு அங்காமி 2 தொகுதியில் முதல்வர் ரியோ நிறுத்தப்பட்டுள்ளார். பெரன் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெலியாங் நிறுத்தப்பட்டுள்ளார்.
Tags:
Meghalaya Assembly Elections Chief Minister Former Terrorist Leader Bharatiya Janata Party மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை முன்னாள் தீவிரவாதி தலைவன் பாரதிய ஜனதாமேலும் செய்திகள்
சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை
ஒரு மணி நேரம் தேவையற்ற மின்பயன்பாட்டை தவிர்த்திடுக : பூமிநேரம் தினத்தை முன்னிட்டு கடற்கரையில் பிரம்மாண்ட மணற்சிற்பம்!!
ஒயிட்ஃபீல்டு முதல் கிருஷ்ணராஜபுர வரையிலான பெங்களூரு மெட்ரோ ரயில் வழித்தடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பயணம்!!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய சோகாதாரத்துறை கடிதம்
36 செயற்கைகோளுடன் LVM3-M3 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் தொடங்கியது!!!
இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை தகுதி நீக்க நடவடிக்கையில் சிக்கிய தலைவர்கள்..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி