SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேறு நபருடன் நிச்சயம் செய்ததால் ஆத்திரம் ஓடும் ஆட்டோவில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன் கைது: காதலுக்காக கப்பல் வேலையை துறந்தவர் கம்பி எண்ணுகிறார்

2023-02-03@ 00:30:14

அந்தியூர்: வேறு நபருடன் நிச்சயம் செய்ததால் ஓடும் ஆட்டோவில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன் கைது செய்ப்பட்டார். நீலகிரி மாவட்டம் குன்னூர் சந்திரா காலனியை சேர்ந்தவர் ராஹிலா (25). பிஎஸ்சி பட்டதாரியான இவர், அந்தியூர் அடுத்த மைக்கேல் பாளையத்தில் உள்ள பள்ளியில் ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆசிரியையாக உள்ளார். அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் தோழியுடன் அறை எடுத்து தங்கியிருந்த ராஹிலா தினமும் பள்ளி பஸ்சில் பணிக்கு செல்வார். நேற்று முன்தினம் ராஹிலாவை அவரது பெரியம்மா மகன் ஜீவா (35) பள்ளிக்கு சென்று சந்தித்துள்ளார். அதன் பின்னர் அவர் தங்கியிருந்த பகுதியில் இருந்து ஆட்டோவில் இருவரும் அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் சென்றனர்.

ஆட்டோவில் சென்றபோது, ஜீவா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஹிலாவை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அவர் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த  ஜீவா மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து ராகிலாவின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். அவர் அலறி துடிக்கவே, டிரைவர் ஆட்டோவை போலீஸ் நிலையத்தை நோக்கி ஓட்டினார். உடனே ஜீவா ஆட்டோவில் இருந்து குதித்து தப்ப முயன்றார். அப்பகுதியினர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ராஹிலா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் கூடலூர் முக்கூர் பகுதியைச் சேர்ந்த ஜீவா எம்ஏ பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் பட்டப்படிப்பை முடித்துள்ளார். லண்டனில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக  சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார். ராஹிலாவிற்காக கூடலூர் பகுதியில் ரூ.10 லட்சத்தில் ஒரு வீட்டையும், மேலும் 20 சென்ட் நிலத்தையும்  வாங்கியுள்ளார். அவரை திருமணம் செய்வதற்காக மூன்று ஆண்டுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி, தற்போது அங்கு கடுகு, ஏலம் விவசாயம் செய்து வருகிறார். ஜீவாவின் தாயார் ஜெரினா பேகமும், ராஹிலாவின் தாயார் சமீமாவும் சகோதரிகள். ஜீவாவின் தயாரான ஜெரினா பேகம் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் இஸ்லாமியர்கள் சித்தி, பெரியம்மா வழியில் அண்ணன், தங்கை முறையில் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற தகவலின் அடிப்படையில் ஜீவா தனது சித்தி மகளான ராஹிலாவை காதலித்துள்ளார். ஆனால் பெற்றோர் ஏற்காமல் ராஹிலாவிற்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமண செய்ய நிச்சயம் செய்துள்ளனர். இதையறிந்த ஜீவா உடனடியாக அந்தியூரில் பணிபுரியும் ராஹிலாவை சந்தித்து திருமணம் செய்து கொள்ளலாம் வா என அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்ததால்தான் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஜீவாவை கைது செய்து நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • switzerland-japan-win

  சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

 • choco-fac-fire-27

  அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

 • missii

  வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்