SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீன எல்லையை கண்காணிக்க அமெரிக்காவிடம் நவீன டிரோன்கள் வாங்கும் இந்தியா: ரூ.24,000 கோடிக்கு விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

2023-02-03@ 00:09:40

வாஷிங்டன்: அமெரிக்காவிடம் இருந்து ரூ.24,666  கோடியில் நவீன டிரோன்கள் வாங்குவதற்கு இந்தியா தீவிரம் காட்டி  வருகிறது. விரைவில்  ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது. ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியா அதிகம் கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில், சீன எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க ஏதுவாக ரூ.24 ஆயிரத்து 666 கோடி மதிப்பிலான 30 எம்கியூ-9பி பிரிடேட்டர் ஆயுதமேந்திய டிரோன்களை  வாங்க இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. இது  சீன எல்லைப் பகுதிகள் மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடல் பகுதி தொடங்கிப் பல பகுதிகளில் இந்தியாவின் கண்காணிப்பை வலுப்படுத்த உதவும். சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமெரிக்கா சென்ற நிலையில், இந்த விவகாரம் குறித்து அவர் அமெரிக்காவின் தேச பாதுகாப்பு அதிகாரி ஜேக் சலிவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இரு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை சாதகமாக இருந்தது. இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யும்’’ என்றார். ஜோ பைடன் ஆர்வம்: இந்தியா-அமெரிக்கா இடையே வளர்ந்து வரும்  தொழில்நுட்பம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள தேசிய பாதுகாப்பு  ஆலோசகர் அஜித் தோவல் சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அமெரிக்கா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்  மற்றும் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில்,  அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் நேற்று பேட்டியளிக்கையில்,‘‘  இந்தியாவும் அமெரிக்காவும் பல விஷயங்களில் ஒத்துழைப்பு மேற்கொண்டு  வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையில் மேற்கொள்ளப்படும்  ஒத்துழைப்பு இருநாடுகள் இடையேயான உறவில் மிக முக்கியமாக கருதுவதாக அதிபர்  ஜோ பைடன் கருதுகிறார்’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்