3 வது பேனர் மாற்றம் அடி... இடி மாறி விழுந்து இருக்கு போல!
2023-02-02@ 01:37:43

‘தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி என இருமுறை மாற்றப்பட்ட பேனர், நேற்றிரவு 3வது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. அதில், ‘எம்.ஜிஆர், ஜெயலலிதா அருளாசியுடன், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நல்லாசி பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளர் தென்னரசு’ என்று கூறப்பட்டு இருந்தது. இதைபார்த்த கட்சியினர் மேலிடத்தில் இருந்து அடி...இடி மாதிரி கொடுத்து இருக்காங்க போல... என கமென்ட் அடித்துக்கொண்டனர்.
* தேமுதிக - 5 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 4 சுயேச்சைகள் மனுக்கள் செய்திருந்த நிலையில், 2வது நாளான நேற்று 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தேமுதிக சார்பில் வேட்பாளர் ஆனந்த், தலைமைக்கழக நிர்வாகிகளுடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவருக்கு மாற்றாக சம்பத்நகர் பகுதி செயலாளர் சரவணன் வேட்புமனு தாக்கல் செய்தார். கரூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயக்குமார் என்பவர் விடுதலை களம் கட்சி சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்தார். அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திமுக சார்பில் சசிகுமார், ஈரோட்டை சேர்ந்த சலவை தொழிலாளி ரவி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்த வீரக்குமார் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் மனு தாக்கல் செய்த 6 பேர் உள்பட இதுவரை 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை குடந்தையில் கே.எஸ்.அழகிரி ரயில் மறியல்: நாகையில் மோடி உருவபொம்மை எரிப்பு; தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான காங்கிரசார் கைது
ஓபிஎஸ்சுக்கு ஆதரவா? சசிகலா பேட்டி
ராகுலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
வெடிவிபத்து நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ் அழகிரி வலியுறுத்தல்
என்எல்சி சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க முடியாது: பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை
பட்டாசு ஆலை வெடி விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!